FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நிதீஷ் குமாருக்கு பலம் கூடுகிறது: மேலும் ஒரு கட்சி ஆதரவு

பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமாருக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜித்தன் ராம் மன்ஜி தெரிவித்துள்ளார். 

6 பிப்ரவரி 2024, 6:18 pm IST
பகிர்:

பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமாருக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜித்தன் ராம் மன்ஜி தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாள்களாகவே பிகார் அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் அறிவித்திருந்தார். 

அவர் தனது முதல்வர் பதவியையும் ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (ஆக. 9) மாலை ஆளுநர் பகு சௌஹானை நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். 

இதனால், பாஜகவுடனான கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் பிகாரில் நிதீஷ் குமார் மீண்டும் ஆட்சியமைப்பார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிதீஷ் குமாருக்கு ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து விலகிய ஜித்தன் ராம் மன்ஜி இக்கட்சியின் தலைவராக உள்ளார். இவர் பிகார் மாநில முன்னாள் முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments