இந்தியா

பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் பறந்து வந்த  வெடிபொருள்கள்; உளவாளி சுட்டுக்கொலை

PTI


ஜம்மு: பாகிஸ்தானிலிருந்து, ஜம்மு சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளால் இயக்கப்பட்ட டிரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் பயங்கரவாதிகளின் உளவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியை சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, காவல்துறையிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

டிரோன் மூலம் வந்த வெடிபொருள் பார்சலை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு திறந்தபோது, அதில் ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT