இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 11,539 பேருக்கு கரோனா

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 11,539 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

DIN

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 11,539 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11,539 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,43,39,429 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 99,879 ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 34 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,27,332 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 16,112 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,37,12,218 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணிநேரத்தில் 26,58,755 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

நாட்டில் இதுவரை 209.67 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 3,07,680 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 88.24 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெடி ஸ்டார்ட்... குஷி கபூர்!

ஜன நாயகன் பூஜா ஹெக்டே போஸ்டர்!

பாக். - ஆப்கன் இடையிலான சண்டையையும் முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் விருப்பம்!

2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

பிரதமர் மோடியுடன் கனட வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

SCROLL FOR NEXT