இந்தியா

ஔரங்காபாத்தில் அரசுப் பேருந்தில் தீ விபத்து: 25 பயணிகள் மீட்பு

மகாராஷ்டிரத்தின் ஔரங்காபாத் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

DIN

மகாராஷ்டிரத்தின் ஔரங்காபாத் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இந்த தீ விபத்து சம்பவம் நேற்றிரவு கங்காபூரில் உள்ள தோரேகானில் நிகழ்ந்துள்ளது. அதிகாலை 1.45 மணியளவில் நாசிக்கில் இருந்து ஹிங்கோலி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து, தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.  தீ பேருந்து முழுவதும் பரவுவதற்குள் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். 

பேருந்தில் இருந்த ஓட்டுநர் உள்பட 25 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT