இந்தியா

கேரளத்தில் பெண் இறந்ததற்கு ரேபிஸ் தொற்று காரணமல்ல: சுகாதாரத் துறை

PTI

கேரளத்தில் சமீபத்தில் நாய் கடித்து பெண் இறந்ததற்கு ரேபிஸ் தொற்று காரணமில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

கடந்த ஜூலை  21-ம் தேதி பெரம்பிரா ரண்டேயாறு பகுதியைச் சேர்ந்த சந்திரிகா என்று பெண்ணுக்கு வெறிநாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. இதையடுத்து அவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி உயிரிழந்தார். 

நான்கு டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட போதிலும் வெறி நாய்க்கடியால் அந்த பெண் இறந்துவிட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன. 

கடந்த வாரத் தொடக்கத்தில் வெறிநாய் கடித்த பெண் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு அவர் உயிரிழந்தார். 

சந்திரிகாவுக்கு வெறி நாய்க்கடி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உறுதிசெய்ய அவரது ரத்த மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். 

இந்நிலையில் சந்திரிகாவின் மாதிரிகள் இன்று வந்துள்ளதையடுத்து. அவர் ரேபிஸ் நோயால் இறக்கவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை உறுதி செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT