நான் எதுவும் ஆக விரும்பவில்லை: நிதீஷ் குமார் 
இந்தியா

நான் எதுவும் ஆக விரும்பவில்லை: நிதீஷ் குமார்

எனக்கு எதுவும் ஆக விருப்பமில்லை என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.

PTI


பாட்னா: எனக்கு பிரதமர் பதவி மீது விருப்பம் இருப்பதாக ஊகங்களை ஏற்படுத்தியிருக்கிறது முந்தைய பாஜக கூட்டணி. ஆனால், எனக்கு எதுவும் ஆக விருப்பமில்லை என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.

பிகார் சட்டப்பேரவையில் இன்று தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் நிதீஷ் குமார். இதனை முன்னிட்டு இரண்டு நாள் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. 

பிகார் சட்டப்பேரவையில் பேசிய நிதீஷ் குமார், நான் ஏதோ ஆக வேண்டும் என்று நினைப்பதாக எண்ணி, ஊகங்களின் அடிப்படையில் என்னை கூட்டணியிலிருந்து வெளியேற்றினார்கள். ஆனால், எனக்கு எதுவும் ஆக விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, நான் முதல்வராக தயாராகவில்லை. பாஜகவிடம் நான் அப்போதே கூறினேன். நீங்கள்தான் அதிக தொகுதிகளில் வென்றுள்ளீர்கள். உங்கள் கட்சியிலிருந்து தான் முதல்வர் பதவி வகிக்க வேண்டும். ஆனால், நான்தான் முதல்வராக வேண்டும் என்று எனக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. இறுதியில் நான் முதல்வராக ஒப்புக்கொண்டேன்.

ஆனால், நான் யாரை, எனது கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த ஒருவரை கட்சியின் உயர் பதவிக்குக் கொண்டு வந்தேனோ, நான் தான் கட்சியின் தேசியத் தலைவர். ஆனால், அவரை அந்தப் பதவியில் நியமித்தேன். எனது கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.. ஏதோ ஒரு தவறு நடக்கப்போகிறது என்று. ஆனால் நான் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வான ராணுவ வீரர்..!

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4!

மினுமினுப்பு... ரித்திகா சிங்!

போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்!

SCROLL FOR NEXT