கர்நாடகத்தில் மருத்துவக் கல்லூரி திறப்பதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள நேலமங்கலா பகுதியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பிற்கு கல்லூரி வளாகம் கட்டப்பட்டுள்ளது.
எஸ்டிஎம் குழுவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் சார்பில் இக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.