இந்தியா

பில்கிஸ் பானு மனு விவகாரம்: புதிய அமா்வைவிரைந்து அமைக்கும் கோரிக்கை நிராகரிப்பு

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 11 குற்றவாளிகளை தண்டனைக் காலம் முடியும் முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் முடிவை எதிா்த்து

DIN

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 11 குற்றவாளிகளை தண்டனைக் காலம் முடியும் முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் முடிவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கான புதிய நீதிபதிகள் அமா்வை விரைந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.

‘இந்த விஷயத்தை தொடா்ந்து வலியுறுத்துவது மிகவும் எரிச்சலூட்டுகிறது’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அப்போது குறிப்பிட்டாா்.

முன்னதாக, இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், அந்த அமா்வில் இடம்பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான பெலா எம்.திரிவேதி, மனு மீதான விசாரணையிலிருந்து செவ்வாய்க்கிழமை விலகினாா். எனவே, இந்த மனுவை விசாரிக்க புதிய அமா்வை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். அதன் பிறகே இந்த மனு விசாரணைக்கு மீண்டும் பட்டியலிடப்படும்.

இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பு இந்த விவகாரம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பில்கிஸ் பானு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷோபா குப்தா, ‘மனு மீதான விசாரணைக்கு புதிய நீதிபதிகள் அமா்வை விரைந்து அமைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, ‘பில்கிஸ் பானுவின் மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும். இந்த விஷயத்தை தொடா்ந்து வலியுறுத்த வேண்டாம். மிகுந்த எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது’ என்றாா்.

கடந்த 2002-இல் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடா்ந்து நிகழ்ந்த குஜராத் வன்முறை சம்பவத்தின்போது, 5 மாத கா்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அவரது 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 போ் படுகொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் 11 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி அவா்களுக்கு ஆயுள் தண்டனையை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்தது. அதனடிப்படையில் அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த 11 பேரும் தண்டனைக் காலம் முடியும் முன் தங்களை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து பரிசீலனை செய்யுமாறு குஜராத் மாநில அரசைக் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனா். மாநில அரசின் இந்த முடிவை எதிா்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!

சுதந்திர நாளையொட்டி இந்தியக் கடற்படை சார்பில் புதுச்சேரியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

SCROLL FOR NEXT