இந்தியா

லதா மங்கேஷ்கர் மறைவு: இரண்டு நாள்கள் துக்கம் அனுசரிப்பு

DIN


பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரண்டு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் (92) கடந்த ஜனவரி 8-ம் தேதி மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் உள்ள லதா மங்கேஷ்கரின் உடல் பகல் 12.30 மணியளவில் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சிவாஜி பூங்காவில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடு முழுவதும் இன்றும் (பிப்ரவரி 6) நாளையும் (பிப்ரவரி 7) துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT