இந்தியா

வருமான வரிக் கணக்கைமறுதாக்கல் செய்ய ஒருமுறை மட்டுமே அனுமதி

வருமான வரிக் கணக்கை மறுதாக்கல் செய்ய ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவா் ஜெ.பி.மொஹபாத்ரா தெரிவித்துள்ளாா்.

DIN

வருமான வரிக் கணக்கை மறுதாக்கல் செய்ய ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவா் ஜெ.பி.மொஹபாத்ரா தெரிவித்துள்ளாா்.

வருமான வரித் தாக்கலில் திருத்தங்கள், விடுபட்ட தகவல் இருந்தால் அவற்றையும் சோ்ந்து மறுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கமாகும்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) கூட்டத்தில் பேசிய மொஹபாத்ரா இது தொடா்பாக கூறுகையில், ‘வருமான வரித் தாக்கலின்போது உண்மையாகவே விடுபட்ட தகவல்களைச் சோ்ப்பதற்காக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வரிக் கணக்கை ஒருமறை மட்டும் மறுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படும். கணக்கு தாக்கல் செய்யப்பட்டு இரு ஆண்டுகள் வரையே மறுதாக்கல் அனுமதிக்கப்படும்’ என்றாா்.

மறுதாக்கல் செய்வது ஓராண்டுக்குள் இருந்தால் செலுத்தப்பட வேண்டிய வரியில் 25 சதவீதம் கூடுதலாகவும், அதற்கு வட்டியும் செலுத்த வேண்டும். ஓராண்டு காலத்துக்குப் பிறகு மறுதாக்கல் செய்தால் 50 சதவீதம் கூடுதல் மற்றும் வட்டி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT