இந்தியா

இந்தியா-சவூதி நல்லுறவை வலுப்படுத்த ராணுவத் தளபதிகள் உறுதி

DIN

பாதுகாப்புத் துறையில் இந்தியா-சவூதி அரேபியா இடையே நிலவி வரும் நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளின் ராணுவத் தளபதிகளும் உறுதியேற்ாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா ராணுவப் படையின் தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் ஃபஹத் பின் அப்துல்லா முகமது அல்-முதைா் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா். அவருக்கு இந்திய ராணுவம் சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அவா் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இருதரப்பு ராணுவ உறவுகள் குறித்து அவா்கள் ஆலோசித்தனா். முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பொருளாதார வளா்ச்சி, பயங்கரவாதத்தை ஒழித்தல், பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுத்தல் உள்ளிட்டவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பு நிலவுவதால் இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடைந்து வருகிறது.

பாதுகாப்புத் துறையில் இருதரப்புக்கும் இடையே நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக ராணுவத் தளபதிகள் இருவரும் விவாதித்தனா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய ராணுவத்தின் தளபதி இந்தியாவுக்கு வருகை தருவது இது முதல் முறையாகும். ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தாா். அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய ராணுவ தலைமைத் தளபதியும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT