இந்தியா

புதுச்சேரி பேரவை: தொடங்கிய 21 நிமிடங்களிலேயே நிறைவு

DIN

புதுச்சேரி 15-வது சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டம் தொடங்கிய 21 நிமிடங்களிலேயே காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின், 15-ஆவது சட்டப் பேரவையின் இரண்டாவது பேரவைக் கூட்டம், புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் என். ரங்கசாமி, எதிர்கட்சித் தலைவர் ஆர். சிவா மற்றும் 30 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முதலில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த கூட்டத் தொடரின் போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, சட்ட முன்வரைவு அளித்தது, தொடர்பான அறிவிப்புகள் குறித்து வாசிக்கப்பட்டது.

இதற்கிடையே, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்காததால், திமுக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடி வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பேரவை தொடங்கிய 21 நிமிடங்களிலேயே கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்ததையடுத்து கூட்டம் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT