இந்தியா

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 177.17 கோடியைக் கடந்தது

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 177.17 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

DIN

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 177.17 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் 2,02,74,848 தடுப்பூசி மையங்கள் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 28,29,582 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,77,17,68,379 (177.17 கோடி) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்


கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,499 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 255 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,13,481 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 23,598 பேர் கரோனா நோயிலிருந்து விடுபட்ட நிலையில், இதுவரை மொத்தம் 4,22,70,482 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து குணமடைந்தோர் விகிதம் 98.52 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரிசோதனைகள் திறன் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டில் வாராந்திர நேர்மறை விகிதம் தற்போது 1.36 சதவிகிதமாகவும், தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 1.01 சதவிகிதமாகவும் உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 76,57,35,314 (76.57 கோடி) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,36,133 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT