இந்தியா

ஹிஜாப்: வழக்குத் தொடர்ந்த 3 மாணவிகள் பழிவாங்கப்படுகின்றனரா?

DIN

ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மூன்று முஸ்லீம் மாணவிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் கல்வி நிலையம் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து கலவரம் வெடித்தது. ஏபிவிபி போன்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் முஸ்லீம் மாணவிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், கல்வி நிலையங்களும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு அனுமதி மறுத்தது.

இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆறு மாணவிகள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு தனி அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் வழக்குத் தொடர்ந்த 6 மாணவிகளில் 3 பேரை உடுப்பியிலுள்ள அரசு பியூ கல்லூரி நிர்வாகம் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை. அவர்களது செய்முறை கையேடை வாங்க மறுப்புத் தெரிவித்த ஆசிரியர்கள், மாணவிகள் மூன்று பேரையும் தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியே நிற்கவைத்துள்ளனர்.

ஹிஜாபை கழற்றினால் மட்டுமே செய்முறைத் தேர்வு கையேடை (ரெக்கார்ட் நோட்) வாங்கிக்கொள்வதாக ஆசிரியர் கூறியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT