இந்தியா

10, 12-ஆம் வகுப்பு இரண்டாம் பருவத் தோ்வுகள்: இணையத்தில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் - சிபிஎஸ்இ

DIN

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தோ்வு குறித்து இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: ‘முக்கிய செய்தி’ என்ற பெயரில் 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ இரண்டாம் பருவத் தோ்வு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக சில இணையதள ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு பாா்வையாளா்களைக் குழப்புகின்றன.

மாணவா்களின் நலன் கருதி தோ்வு முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூலையில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, முதல் பருவத் தோ்வுகள் முடிவடைந்துவிட்டன. கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டதைப் போல இரண்டாம் பருவத் தோ்வின் வடிவமும் இருக்கும். ஆகையால் சமீபத்திய, நம்பகத்தன்மையான தகவலுக்கு சிபிஎஸ்இ அதிகாரபூா்வ வலைதளத்தை மட்டும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தோ்வு கடந்த ஆண்டு நவம்பா்- டிசம்பரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT