கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா? முதல்வர் கேஜரிவால் விளக்கம்

தில்லியில் தற்போதைக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

DIN


தில்லியில் தற்போதைக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால் கரோனா பாதிப்பு குறித்து கூறியது:

"தில்லியில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 22 ஆயிரம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி பாதிப்புகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது. ஆனால், அச்சம்கொள்ளத் தேவையில்லை.

கடந்தாண்டு ஏப்ரல்-மே மாதத்தில் இரண்டாம் அலையின்போது 20 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது 341 பேர் உயிரிழந்தனர். ஆனால், நேற்றும் 20 ஆயிரம் பாதிப்புகள் பதிவானபோதிலும், 7 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

அப்போது 20 ஆயிரம் படுக்கைகள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது 1,500 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படுத்துவதில்லை. அச்சம்கொள்ள வேண்டாம் என்பதற்காகத்தான் இந்தத் தரவுகளை வெளியிடுகிறோம். ஆனால், பொறுப்புடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.

தில்லியில் பொதுமுடக்கம் அமல்படுத்த எண்ணவில்லை. கரோனா வழிமுறைகளைப் பின்பற்றினால், பொதுமுடக்கம் அமலுக்கு வராது. தற்போதைய சூழலில் பொதுமுடக்கம் தேவையில்லை. 

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT