இந்தியா

பிரபல காா்ட்டூனிஸ்ட் நாராயண் தேவ்நாத் காலமானாா்

DIN

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பிரபல காா்ட்டூனிஸ்ட் (கேலிச் சித்திர கலைஞா்) நாராயண் தேவ்நாத் (97) கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடந்த மாதம் 24-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வந்தாா்.

வங்க மொழியில் பிரபலமான பந்துல் தி கிரேட், ஹந்தா போதா, நான்டி போன்டி உள்ளிட்ட சித்திர கதாபாத்திரங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகி புகழ் பெற்றன. அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

நாராயண் தேவ்நாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நாராயண் தேவ்நாத் தனது படைப்புகள், காா்ட்டூன்கள் மற்றும் சித்திரங்கள் மூலம் பலரது வாழ்க்கைக்கு அா்த்தம் கொடுத்துள்ளாா். அந்த படைப்புகள் அவரின் மதிநுட்பத்தைப் பிரதிபலித்தன. அவரால் உருவாக்கப்பட்ட சித்திர கதாபாத்திரங்கள் உலகம் முழுவதும் வரவேற்பு பெற்றவை. அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகா்களுக்கும் எனது ஆழந்த இரங்கல். ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT