இந்தியா

தில்லியில் 1,000 டிரோன்கள் கொண்டு வானில் சாகச நிகழ்வு

DIN

தில்லியில் குடியரசு நாளையொட்டி 1,000 டிரோன்கள் மூலம் வானில் பல்வேறு சாகச நிகழ்வுகள் நேற்று இரவு நடத்தப்பட்டது.

நாட்டின் 73-வது குடியரசு நாள் நேற்று தில்லியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் ஒரு பகுதியாக பாசறை திரும்பும் நிகழ்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.

இதில், தில்லி ஐஐடி சார்பில் 1,000 டிரோன்கள் கொண்டு வானில் தேசிய கொடி, கைத்தடியுடன் காந்தி, மத்திய அரசின் திட்ட இலட்சினை உள்ளிட்ட வடிவங்களை உருவாக்கி சாகச நிகழ்வு நடத்தவுள்ளனர்.

இதற்கான ஒத்திகை தில்லி விஜய் சவுக் பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்டன. இந்த நிகழ்வை பெரும்பாலான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சீனா, ரஷியா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக 1,000 டிரோன்களை கொண்டு வானில் சாகச நிகழ்வை நடத்தும் நான்காவது நாடாக இந்தியா இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT