இந்தியா

கா்நாடகத்தில் லேசான நிலநடுக்கம்

DIN

கா்நாடக மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:

கா்நாடகத்தின் தென் பகுதியில் உள்ள சுலியா தாலுகாவில் சில இடங்களிலும், குடகு மாவட்டத்தையொட்டிய பகுதிகளிலும் லேசான நிலநடுக்கும் ஏற்பட்டது. செம்பு, பெராஜி, கரிகி, பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளிக்கிழமை கலை இந்த நில அதிா்வை உணா்ந்துள்ளனா். ரிக்டா் அளவுகோலில் இந்த நில அதிா்வு 2.5 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இந்த வாரத்தில் மூன்றாவது நாளாக நில அதிா்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, ஜூன் 25 மற்றும் அதனைத் தொடா்ந்து ஜூன் 28-ஆம் தேதிகளில் தலா இரு முறை நிலவு அதிா்வு ஏற்பட்டது.

நில அதிா்வுக்கான காரணத்தை அறிய இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையத்தின் விளக்கமான அறிக்கைக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT