இந்தியா

தில்லியில் 35 லட்சம் மரக்கன்றுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடப்படும்: சுற்றுச்சூழல் அமைச்சர்

DIN

தலைநகர் தில்லியில் மாசினைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இறுதிக்குள் 35 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: “தில்லியை பசுமையாக மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நாங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் 35 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்கினை வைத்துள்ளோம். அரசு வருகிற ஜூலை 11ஆம் தேதி முதல் “வன் மகோத்சவ்” முயற்சியின் கீழ் 15 நாட்கள் மரக்கன்றுகளை தில்லி முழுவதும் நட முடிவு செய்துள்ளது. தில்லியின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. காற்று மாசுபாட்டைத் தடுக்க தில்லி அரசு எடுத்துள்ள இந்த முயற்சி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு உதாரணமாக இருக்கும். தில்லி முழுவதும் 14 இடங்களில் விதைப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் செல்லிடப்பேசி எண் மக்களுக்கு விரைவில் வழங்கப்படும். தில்லியில் பசுமை பகுதிகளின் சதவிகிதம் 32 ஆக உள்ளது. இதனை மேலும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல அரசு நகர விவசாயத்தினை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் தங்களது வீட்டு வளாகங்களிலேயே தங்களுக்குத் தேவையான காய்கறிகளை பயிரிட்டு வளர்க்கலாம்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT