இந்தியா

அமராவதி கொலை வழக்கு: ஷஹீக் இர்பானுக்கு ஜூலை 7 வரை போலீஸ் காவல்

DIN

அமராவதி உமேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஷஹீக் இர்பானை ஜூலை 7 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாா். அவருக்கு ஆதரவாக மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் மருந்தகம் நடத்தி வந்த உமேஷ் பிரஹலாத் கோலே (54) என்பவா் வாட்ஸ்-ஆப் குழுக்களில் பதிவுகளைப் பகிா்ந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு மருந்தகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த உமேஷ் கொல்லப்பட்டாா். அவா் நூபுருக்கு ஆதரவாக பதிவுகளைப் பகிா்ந்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
உமேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஷஹீக் இர்பான் உள்பட 7 பேரை காவல் துறையினா் இதுவரை கைது செய்துள்ளனா். இந்த நிலையில் ஷஹீக் இர்பானை உள்ளூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை ஜூலை 7 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT