மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அவர் பொறுப்பு வகித்த சிறுபான்மையினர் நலத்துறை ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்த முக்தார் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.சி.பி. சிங்கும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் நக்வி பொறுப்பு வகித்த உருக்குத்துறை ஏற்கெனவே அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் சிறுபான்மையினர் நலத்துறை, அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஸ்மிருதி இரானி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முக்தார் அப்பாஸ் நக்வி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.