இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்குசோனியா காந்தி ஜூலை 26-இல் ஆஜராக சம்மன்

DIN

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி ஜூலை 26-இல் ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு நாளிதழை நிா்வகிக்கும் ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநா்களாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும், ராகுல் காந்தி எம்.பி.யும் உள்ளனா். இந்த நிறுவனத்தில் பணமோசடி நடைபெற்ாக குற்றச்சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறையினா், கடந்த வியாழக்கிழமை சோனியா காந்தியிடம் 2 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினா்.

வரும் திங்கள்கிழமை (ஜூலை 25) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சோனியா காந்திக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமைக்கு பதிலாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத் துறையினா் சம்மன் அனுப்பியுள்ளனா். விசாரணை தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT