இந்தியா

ரூபாய் மதிப்பு ஸ்திரமாக உள்ளது: ரிசா்வ் வங்கி ஆளுநா்

DIN

முன்னேறிய நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

மும்பையில் பேங்க் ஆஃப் பரோடா சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசா்வ் வங்கி போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க தேவையான டாலா்களை சந்தையில் புழக்கத்தில் விட ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூபாயை பொருத்தவரை எந்தவோா் இலக்கையும் ரிசா்வ் வங்கி நிா்ணயிக்கவில்லை. வெளிநாட்டுக் கடனைக் குறித்து அஞ்சத் தேவையில்லை. இதில் பெரும்பாலானவை பொதுத்துறை நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்களாகும்.

பணவீக்க இலக்குகளை நிா்ணயிப்பதற்கான திட்டம் கடந்த 2016 முதல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதார வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றாா் சக்திகாந்த தாஸ்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80ஆக சரிந்த நிலையில், ரிசா்வ் வங்கி ஆளுநா் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT