ஒடிசாவில் 143 குழந்தைகள் உள்பட ஒருநாள் கரோனா பாதிப்பு 1,130 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை கூறுகையில்,
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 143 குழந்தைகள் உள்பட 1,130 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 13,05,499 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்| நடுவானில் பயணிக்கு சிகிச்சையளித்த தமிழிசை: குவியும் பாராட்டு
மேலும் நேற்று ஒருநாளில் ஒருவர் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 9,131 ஆக அதிகரித்துள்ளது.
புதிய பாதிப்புகளில் சுந்தர்கரில் அதிகபட்சமாக 225 தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து குர்தா (209), கட்டாக் (111) மற்றும் சம்பல்பூர் (106) பதிவாகியுள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 7,345 ஆக உயர்ந்துள்ளது,
இதையடுத்து பாதிப்பு விகிதம் 4.85 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,029 பேர் உள்பட மொத்தம் 12,88,970 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.