இந்தியா

மகாராஷ்டிரத்தில் இதற்கும் வருகிறது தடை!

PTI

மகாராஷ்டிரத்தில் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பொருள்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை 2022-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். இதைத்தொடா்ந்து, நெகிழி கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை, பயன்பாட்டிற்கு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால், பல இடங்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கோப்பைகள், கொள்கலன்கள் மற்றும் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பொருள்கள் சேர்த்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

எனவே, பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பொருள்களுக்கும், பிளாஸ் பூச்சு சேர்க்கப்பட்ட பொருள்களும் இன்று முதல் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூட்டிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 2018-ம் ஆண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தகைய பொருள்களின் தன்மை குறித்த தெளிவின்மையை நீக்க இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT