கேரளத்தில் வீடு இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் அருகே இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்தான்.
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் அருகே இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்தான்.
பெரும்பாவூரில் இரண்டு மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. வீடு இடிந்து விழும்போது சிறுவன் மற்றும் அவனது தாத்தா மேல் தளத்தில் இருந்துள்ளனர்.
இதன் விளைவாக அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி கூறினார்.
Advertisement
Advertisement
வீடு இடிந்து விழும் சமயத்தில் வீட்டில் 6-7 பேர் இருந்ததாகவும், ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், வீடு இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.