இந்தியா

திகார் சிறையில் காவலர் அலுவலகத்தில் சிசிடிவி: தில்லி நீதிமன்றம் உத்தரவு

திகார் சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு திகார் சிறை இயக்குநருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

IANS


திகார் சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு திகார் சிறை இயக்குநருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உயரடுக்கு பாதுகாப்பு கொண்ட தேசிய தலைநகர் திகார் சிறைச்சாலையில் சமீபத்தில் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. சிறைச்சாலையுடன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்த ஓராண்டில் பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களால் கைதிகளுக்கு சலுகைகளை நீட்டித்தாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதையடுத்து, சிறைக் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேரமாக்கள் பொருத்தப்பட்டால் சிறை அதிகாரிகள் மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் களையப்படும். இது வெளிப்படைத் தன்மையை மேலும் பிரதிபலிக்கும் என்று நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவில் கூறியது. 

திகார் சிறை கைதிகளுக்கு வசதிகளை வழங்குவதில் பிடிபட்ட அதிகாரிகளுக்கு பெரும் பின்னடைவைத் தொடர்ந்து திகார் சிறை தனது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT