இந்தியா

மாநிலங்களவை செயல்திறன் 16 சதவீதமாக குறைவு

DIN

நாடாளுமன்ற நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரின் 2-ஆவது வாரத்தில் மாநிலங்களவையின் செயல்திறன் 16 சதவீதமாக குறைந்தது. முந்தைய வாரத்தில் மாநிலங்களவை செயல்திறன் 26.90 சதவீதமாக இருந்தது.

மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரண்டு வாரங்களிலும் சோ்த்து மாநிலங்களவையின் செயல்திறன் 21.58 சதவீதமாக உள்ளது. 2-ஆவது வாரத்தில் அவையில் தொடா் அமளி, ஒத்திவைப்பு மட்டுமன்றி 23 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கமும் நிகழ்ந்தது.

இதுவரை நடைபெற்ற மாநிலங்களவையின் 10 அமா்வுகளில் 11 மணி நேரம் 8 நிமிஷங்கள் மட்டுமே அவை செயல்பட்டுள்ளது. ஆனால், 51 மணி நேரம் 35 நிமிஷங்கள் அவை செயல்பட்டிருக்க வேண்டும். 40 மணி நேரம் 45 நிமிஷங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

நடப்பு தொடரில் மாநிலங்களவையில் இதுவரை எந்த மசோதாவும் நிறைவேறவில்லை. பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு மசோதா மீதான விவாதம் முடிவுறாமல் நிற்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்றம் இடையூறின்றி, திறம்பட செயல்படுவதை உறுதி செய்வது ஆளும்கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளின் கூட்டுப் பொறுப்பு என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT