ஹார்திக் படேல் 
இந்தியா

‘புதிய அத்தியாயத்தை தொடங்கப் போகிறேன்’: ஹார்திக் படேல்

இன்றுமுதல் புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளதாக பாஜகவில் இணையவுள்ள ஹார்திக் படேல் தெரிவித்துள்ளார்.

DIN

இன்றுமுதல் புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளதாக பாஜகவில் இணையவுள்ள ஹார்திக் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த ஹார்திக் படேல், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் வியாழக்கிழமை இணையவுள்ளார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஹார்திக் படேலை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் விழாவில் பாஜகவில் இணைகிறார்.

இதுகுறித்து ஹார்திக் படேல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

‘இன்றுமுதல் புதிய அத்தியாயத்தை தொடங்கப் போகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்காக உழைப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த மாநில செயல் தலைவர் ஹார்திக் படேல் கடந்த மே 19ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT