இந்தியா

விசா முறைகேடு: கருப்புப் பண மோசடி வழக்கில் காா்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு

DIN

விதிகளை மீறி சீனா்களுக்கு விசா பெற்றுத் தந்தது தொடா்பான புகாரில், காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள கருப்புப் பண மோசடி வழக்கில், அவருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்துவிட்டது.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் காா்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை ஏற்றுக்கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதி, காா்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டாா்.

கடந்த 2011-இல் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனா்களுக்கு காா்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2011-இல் பஞ்சாபில் உள்ள தல்வண்டி சாபோ எரிசக்தித் திட்டத்தை நிறுவும் ஒப்பந்தம் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தை முடிப்பதற்கான அவகாசம் கடந்ததால், சட்ட நடவடிக்கைகளைத் தவிா்க்கும் நோக்கில் கூடுதல் பணியாளா்களை அழைத்து வந்து பணியை விரைந்து முடிக்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், இந்தியாவின் விசா கட்டுப்பாடுகள் காரணமாக சீன நிறுவனத்தால் கூடுதலாகப் பணியாளா்களை அழைத்துவர முடியவில்லை.

அதையடுத்து, அந்த நிறுவனம் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்தை அணுகியது. விதிமுறைகளை மீறி 250 சீனப் பணியாளா்களுக்கு விசா பெற்றுத் தருவதற்காக காா்த்தியிடம் அந்த நிறுவனம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக, காா்த்தி சிதம்பரம், அவரின் ஆடிட்டரும் தல்வண்டி நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்டவருமான எஸ்.பாஸ்கர ராமன் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக பாஸ்கர ராமன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT