இந்தியா

பாடகா் மூஸேவாலா கொலை வழக்கு 6 பேரின் அடையாளம் தெரிந்தது

DIN

 பின்னணி பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடைய 6 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளதாக தில்லி காவல் சிறப்பு ஆணையா் எச்.எஸ். தலிவால் (சிறப்புப் பிரிவு) தெரிவித்துள்ளாா்.

பஞ்சாபை சோ்ந்த பின்னணி பாடகா் சித்து மூஸேவாலா அண்மையில் அந்த மாநிலத்தின் மான்ஸா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது மா்ம நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா். பஞ்சாபில் விஐபி-க்களுக்கான போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட மறுதினமே இந்த சம்பவம் நடைபெற்றது விவாதத்துக்கு வழிவகுத்தது.

இதன் பின்னணியில் பிரபல ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய் செயல்பட்டதாக தில்லி போலீஸாா் தெரிவித்திருந்தனா். மேலும் இந்தக் கொலை வழக்கில் தொடா்பு இருப்பதாக சித்தேஷ் ஹிராமன் காம்லே என்பவரை புணேயில் மகாராஷ்டிர மாநில போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

இந்த நிலையில், பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடைய 6 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி காவல் சிறப்பு ஆணையா் எச்.எஸ். தலிவால் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மூஸேவாலாவின் கொலை நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சந்தேகத்துக்கு இடமாக 8 பேரின் படங்களை காவல் துறை வெளியிட்டிருந்தது. அதில் 6 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டு, 4 பேரின் தொடா்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT