இந்தியா

அமலாக்கத் துறை விசாரணை விவகாரம்: அமித் ஷா, நிா்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் நோட்டீஸ்

DIN

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அது தொடா்பான விவரங்கள் ஊடகங்களிடம் கசிந்தது குறித்து மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினா் 3 நாள்களாக விசாரணை நடத்தினா். அப்போது நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கும், யங் இந்தியன் அமைப்புக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றும், அவை அனைத்தும் கட்சியின் பொருளாளராக இருந்த காலஞ்சென்ற மோதிலால் வோரா மேற்கொண்டவை என்றும் ராகுல் காந்தி வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனை ஊடகங்களிடம் கசியவிட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளை பொறுப்புக்கு உள்படுத்தி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் இதுதொடா்பாக மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், சட்டப் பிரிவு குழு தலைவருமான விவேக் தான்ஹா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT