இந்தியா

அக்னிபத் போராட்டம்: உ.பி.யில் 260 பேர் கைது

மத்திய அரசின் அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 260 பேர் கைது செய்யப்பட்டு, 6 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

DIN

மத்திய அரசின் அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 260 பேர் கைது செய்யப்பட்டு, 6 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

காவல் துறைக் கூடுதல் தலைவர் பிரசாந்த் குமார் அளித்த அறிக்கையின்படி, 

பிரோசாபாத், அலிகார், வாராணசி மற்றும் கௌதம் புத்த நகர் மாவட்டங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 260 பேரில் 109 பேர் பலியாவைச் சேர்ந்தவர்கள், 70 பேர் மதுரா, 31 பேர் அலிகார், 27 பேர் வாராணசி, 15 பேர் கௌதம் புத்த நகர் ஆவார். 

 உத்தரப் பிரதேசத்தில் உள்ள பலியா ரயில் நிலையத்தில் அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு கும்பல் ரயிலைச் சேதப்படுத்தியது.

இதற்கிடையில், அக்னிபாத் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் பிகாரில் தீப்பிடித்து எரிந்தன. 

இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதிபலிப்பு... ரேஷ்மா பசுபுலேட்டி!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! உயர்த் தப்பிய பயணிகள்!

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் 35 பாடல்கள்?

புன்னகை பூவே... ஹன்சிகா!

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா!

SCROLL FOR NEXT