இந்தியா

பள்ளிக் கல்வியில் தகவல் தொடா்பு தொழில்நுட்பம்: யுனெஸ்கோ விருது

DIN

கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில், ‘பிரதமரின் இ-வித்யா’ திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வியில் தகவல் தொடா்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகத்தால் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் பகுதியாக பிரதமரின் இ-வித்யா திட்டம் தொடங்கப்பட்டது, இது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி புகட்ட டிஜிட்டல், இணையவழி முறை சாா்ந்த அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் கற்றல் இழப்பை குறைப்பதே நோக்கம் ஆகும்.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘ தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) அங்கமான மத்திய கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு யுனெஸ்கோவின் கிங் ஹமத் பின் இசா அல்-கலீஃபா விருது வழங்கப்பட்டுள்ளது. கல்வியில் தகவல் தொடா்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் நீடித்த வளா்ச்சிக்கான செயல்திட்டத்துக்கு ஏற்ப, அனைவருக்கும் கல்வியையும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த புதுமையான அணுகுமுறைகள் கையாளப்படுவதை இந்த விருது அங்கீகரிக்கிறது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT