கோப்புப்படம் 
இந்தியா

நாடு முழுவதும் புதிதாக 12,249 பேருக்கு கரோனா பாதிப்பு: 13 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,249-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

DIN

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,249-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 12,249 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,33,31,645-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 81,687 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.19 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 13 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,903 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 5,718 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,27,25,055-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.60 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,96,45,99,906 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மட்டும் 12,28,291 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கரோனா தடுப்பூசித் திட்டம், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடா் நடவடிக்கைகள், தீவிர கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்ராடம்... ரஜிஷா விஜயன்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

மேற்கு வங்க பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

ஓணம் கொண்டாட்டம்... அனந்திகா சனில்குமார்!

டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்!

SCROLL FOR NEXT