கோப்புப்படம் 
இந்தியா

சிவசேனை பாலாசாகேப்: புதிய பெயர் சூட்டிய ஷிண்டே ஆதரவாளர்கள்

மகாராஷ்டிரத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக நிலவி வரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே அணியினர் சிவசேனை பாலாசாகேப் என புதிய பிரிவை அமைத்துள்ளனர்.

DIN


மகாராஷ்டிரத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக நிலவி வரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே அணியினர் சிவசேனை பாலாசாகேப் என புதிய பிரிவை அமைத்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே 38-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் சூரத் சென்று சூரத்திலிருந்து தற்போது அசாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ளார். இதன் காரணமாக, ஆளும் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், குவஹாட்டியிலுள்ள ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ-க்கள், தங்களது அணிக்கு சிவசேனை பாலாசாகேப் எனப் புதிய பெயரை சூட்டியுள்ளனர். இதனை அதிருப்தி எம்எல்ஏ தீபக் கேசர்கார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இது சிவசேனை மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கான நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. 

சட்டப்பேரவைத் தலைவரிடமிருந்து சட்டப்பூர்வ ஒப்புதல் பெறாதவரை, இதுமாதிரியான பிரிவுகள் அங்கீகரிக்கப்படாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT