குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் 
இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

DIN


புது தில்லி: குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

புது தில்லியில் இன்று தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், யஷ்வந்த் சின்ஹா தனது வேட்புமனுவை அளித்தார்.

வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது பிரசாரத்தை ஜூன் 28-ஆம் தேதி முதல் யஷ்வந்த் சின்ஹா தொடங்கவிருக்கிறார். சென்னையிலிருந்து அவா் பிரசாரத்தைத் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT