கோப்புப்படம் 
இந்தியா

'பஞ்சாபின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்' - பகவந்த் மான் நன்றி

பஞ்சாபின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 

DIN

பஞ்சாபின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது

இதில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117ல் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பஞ்சாபில் ஆம் ஆத்மி, ஆட்சியைப் பிடிக்கிறது. 

இதையடுத்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் பஞ்சாப் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

கட்சி அலுவலகம் முன்பு கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர், 'ஆம் ஆத்மி கட்சி, மாநிலத்திற்காக உழைக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பணியாற்றுவேன். கேஜரிவால் கணித்தபடி, முதல்வர் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, மஜிதியா ஆகியோர் தோற்கிறார்கள். பஞ்சாப் மக்கள் துடைப்பத்தை பயன்படுத்தி தேவையற்ற தலைவர்களை துடைத்தெறிந்துள்ளனர். எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான நேரம் இது. பஞ்சாபின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT