இந்தியா

உத்தரகண்ட், பஞ்சாப்,கோவா தேர்தல்: 11 மணி நிலவரம்

ANI

உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் 11 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

கோவாவில் பாஜக 18, காங்கிரஸ் 12, ஆம் ஆத்மி 1 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும், கோவா ஃபார்வர்டு கட்சி ஒரு தொகுதியிலும், இதர கட்சிகள் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பஞ்சாப்பில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் - 13, சிரோன்மணி அகாலிதளம் - 7, பாஜக - 5, பகுஜன் சமாஜ் - 2, சுயேச்சை 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

உத்தரகண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 44, காங்கிரஸ் 22, பகுஜன் சமாஜ் 2 தொகுதியிலும், சுயேச்சைகள் 2 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT