இந்தியா

தில்லி தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் 

DIN

புதுதில்லி: தில்லி கோகுல்புரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"தில்லியில் கோகுல்புரியில் ஏற்பட்ட தீ விபத்து இதயத்தை உலுக்குகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும்" என்று பிரதமர் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். .

சம்பவ இடத்திற்கு சென்ற தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இறந்த பெரியவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், எரிந்த குடிசைகளுக்கு ரூ.25,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தில்லியின் கோகுல்புரி நகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 

கோகுல்புரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 குடிசைகள் எரிந்து நாசமானதாகவும், 7 பேர் பலியானதாகவும் தில்லி காவல் துறையினர் இன்று காலை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT