இந்தியா

அகஸ்டா வெஸ்ட்லேண்ட்: பாதுகாப்புத் துறை முன்னாள் செயலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

DIN


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில் பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் சசிகாந்த் சர்மா மற்றும் 4 இந்திய விமானப் படை அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2011 முதல் 2013 வரை பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்த சசிகாந்த் சர்மாவை விசாரிக்க அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததையடுத்து, தில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சிபிஐ.

இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்ய அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ. 3,600 கோடி மதிப்பில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு ரூ. 400 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டது.

விவகாரம் தொடர்பாக கிறிஸ்டியன் மிஷெல் உள்ளிட்ட 3 இடைத்தரகர்களுக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT