இந்தியா

கோவிஷீல்டு 2ம் தவணை கால இடைவெளி குறைகிறது: தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை குறைக்க நோய்த்தடுப்புக்கான  தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறுவுறுத்தியுள்ளது.

DIN

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை குறைக்க நோய்த்தடுப்புக்கான  தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறுவுறுத்தியுள்ளது.

12 முதல் 16 வாரங்கள் உள்ள கோவிஷீல்டு இடைவெளியை 8 முதல் 16 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால், கரோனா பரவல் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 12 முதல் 16 வயதுடைய சிறார்களுக்கும் தற்போது தனி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இரண்டு தவணையாக போடப்படும் தடுப்பூசியில், கோவிஷீல்டு இரண்டாவது தவணைக்கு  தடுப்பூசிக்கு 12 முதல் 16 வாரங்கள் கால இடைவெளி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதனைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இது பரிந்துரை மட்டுமே என்றும், இதில் எந்தவொரு இறுதி வரையறையும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்வோரை ஊக்கப்படுத்தவும், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்போருக்காவும் மட்டுமே பரிந்துரைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.  

இதுவரை இந்தியாவில் 181.21 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 1.50 கோடி மட்டுமே கோவேக்ஸின் என்று மத்திய அரசு தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT