பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
இந்தியா

மார்ச் 30ல் 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற கலந்துகொள்ளவிருக்கிறார். 

DIN

வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற கலந்துகொள்ளவிருக்கிறார். 

பிம்ஸ்டெக்(பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு) என்பது இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பு. 

வருகிற மார்ச் 30 ஆம் தேதி பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 5 ஆவது மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கிறார். காணொலி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மோடி உரையாற்றவுள்ளார். 

இதுதொடர்பாக பிம்ஸ்டெக் மூத்த அதிகாரிகளின் கூட்டம் மார்ச் 28 ஆம் தேதியும் பிம்ஸ்டெக் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் மார்ச் 29 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. 

வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மார்ச் 28 -30 தேதிகளில் இலங்கை செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT