FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயரும் சுங்கச்சாவடி கட்டணம்

சமையல் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்தொடர்ந்து, தற்போது அடுத்த கட்டண உயர்வை மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Updated On : 30 மார்ச் 2022, 11:57 am IST
நாடு முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயரும் சுங்கச்சாவடி கட்டணம்
பகிர்:


புது தில்லி: சமையல் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்தொடர்ந்து, தற்போது அடுத்த கட்டண உயர்வை மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, சென்னையில் புறநகர்ப் பகுதிகளான வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

Advertisement

Advertisement

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்தபப்ட்ட சுங்கச்சாவடி கட்டணம் நடைமுறைக்கு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.85 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.45 முதல் உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 8 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பின்படி, பஞ்சாபில் பாட்டியாலா மற்றும் சங்ரூர் சுங்கச்சாவடிகளில் தற்போதைய கட்டணத்தை விட 10 முதல் 18 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments