இந்தியா

குடியரசுத் தலைவருடன் நெதர்லாந்து முன்னாள் இந்திய தூதர் சந்திப்பு

 நமது நிருபர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகின்ற ஏப்ரல் 4 -ஆம் தேதி நெதர்லாந்து பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவரை இந்தியாவுக்கான முன்னாள் நெதர்லாந்து தூதர் வேணு ராஜாமணி சந்தித்துப் பேசினார்.
 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏப்ரல் - 4 தேதி முதல் 3 நாள்கள் நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, நெதர்லாந்து அதிபரையும், பிரதமரையும் சந்திக்கிறார்.
 இதை முன்னிட்டு, நெதர்லாந்துக்கான முன்னாள் இந்திய தூதரும், கேரள அரசின் சிறப்பு அதிகாரியுமான வேணு ராஜாமணி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை சந்தித்து தன்னுடைய நெதர்லாந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 2019 -ஆம் ஆண்டு நெதர்லாந்தின் மன்னர் வில்லியம் அலெக்சாண்டர், ராணி மேக்சிமா ஆகியோர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தனர். அந்தச் சமயத்தில் இந்தியாவுக்கான தூதராக வேணு ராஜாமணி இருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT