இந்தியா

நிலக்கரி உற்பத்தி 29% அதிகரிப்பு

DIN

நிலக்கரி உற்பத்தி 29% அதிகரித்து, கடந்த ஏப்ரலில் 6.65 கோடி டன்னை எட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, மொத்த நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் 2021-இல் 5.16 கோடி டன்னாக இருந்த நிலையில், 29% அதிகரித்து ஏப்ரல் 2022-இல் 6.65 கோடி டன்னை எட்டியுள்ளது.

கோல் இந்தியா நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் மற்றும் கேப்டிவ் மைன்ஸ் போன்ற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 37 முக்கிய நிலக்கரி உற்பத்தி சுரங்கங்களில், 22 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கு மேலாகவும், 10 சுரங்கங்கள் 80 முதல் 100 சதவீதமும் உற்பத்தி செய்துள்ளன.

மின்சார உற்பத்திக்காக அனுப்பி வைக்கப்படும் நிலக்கரியின் அளவும் 18.15 சதவீதம் அதிகரித்து ஏப்ரல் 2022-இல் 6.18 கோடி டன்னை எட்டியுள்ளது. நிலக்கரி சாா்ந்த மின்சார உற்பத்தியும் ஏப்ரல் 2021 உடன் ஒப்பிடுகையில், 9.26 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT