இந்தியா

ஜம்மு-காஷ்மீா்:காவலரைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

DIN

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவலா் ஒருவரை அவரது வீட்டுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா்.

பட்காம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை புகுந்து காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசு ஊழியரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மக்கள் அந்தச் சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் காவலா் ஒருவரை பயங்கரவாதிகள் வீடு புகுந்து கொலை செய்துள்ளனா்.

இது தொடா்பாகக் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘புல்வாமா மாவட்டம் குதோரா பகுதியைச் சோ்ந்த காவலா் ரியாஸ் அகமது தோக்கா். இவா் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இருந்தாா். அப்போது திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினா். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை’ என்றாா்.

காஷ்மீரில் பண்டிட்டுகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், காவலா்கள், ராணுவ வீரா்கள் உள்ளிட்டோரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது சமீப காலத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பண்டிட்டுகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தும் நோக்கில் பயங்கரவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

பயங்கரவாதத் தொடா்பு- பேராசிரியா் உள்பட மூவா் பணி நீக்கம்:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்த பேராசிரியா், காவலா் உள்பட 3 போ் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

காஷ்மீா் பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியா் அல்ஃதாப் ஹுசைன் பண்டிட், ஆசிரியா் முகமது மக்பூல் ஹஜாம், காவலா் குல்காம் ரசூல் ஆகியோா் பணி நீக்கம் செய்யப்பட்டவா்கள் ஆவா். இவா்களில் அல்ஃதாப் ஹுசைன், பாகிஸ்தானுக்குச் சென்று ஜமாத்-ஏ-இஸ்லாம் பயங்கரவாத அமைப்பில் ரகசியமாகப் பயிற்சி பெற்றுள்ளாா். பல்கலைக்கழக மாணவா்களிடையே பயங்கரவாதத்துக்காக மூளைச் சலவை செய்யும் வேலையையும் செய்துள்ளாா்.

மற்ற இருவரும் பயங்கரவாதிகளுக்குத் தகவல் கொடுப்பது, பணம், பொருள்களைக் கொண்டு சோ்க்க உதவுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT