ஸ்ரீநகா்: ஜம்மு - காஷ்மீரில் அரசு ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக கந்தர்பால் மற்றும் அனத்நாக் மாவட்டங்களில் காஷ்மீர் பண்டிட்கள் இன்றும் போராட்டம் தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள துல்முல்லாவில் ஏராளமான காஷ்மீரி பண்டிட்டுகள் தங்களின் சமூக உறுப்பினர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கூடியிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே 12-ம் தேதி புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூராவில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட ராகுல் பட்டின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, எங்களுக்கு நீதி வேண்டும் போன்ற முழக்கங்களை எழுப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்ற போராட்டங்கள் அனந்த்நாக்கிலும் நடத்தப்பட்டன. அங்கு போராட்டக்காரர்கள் உருவ பொம்மைகளை எரித்தனர்.
ராகுல் பட் கொலை குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு யூனியன் பிரதேச நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.