இந்தியா

15-18 வயதுடைய 80% சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மாண்டவியா

DIN

இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறாா்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினார்.

செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை, இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 192.52 கோடியைத் தாண்டியுள்ளது. 

12-14 வயதிற்குப்பட்டவர்களுக்கான கரோனா  தடுப்பூசி மார்ச் 16 அன்று தொடங்கப்பட்டது, இதுவரை 3.30 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி 3 முதல் 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்தியா தடுப்பூசி போடத் தொடங்கியது. இதுவரை இந்த வயதினரில் 5.92 கோடி பேர் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இளம் இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களில்  80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை எடுத்துள்ளனர் என்று மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT